டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

டெல்லியில் தொடர்ந்து 2ஆவது நாளாக 200 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகுள் விதிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று கர்நாடகாவில் நாளை முதல் ஜனவரி ஏழாம் திகதிவரை இரவு நேர ஊரடங்கு அமுலில் இருக்கும். அங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Von Admin