வடமராட்சிப் பகுதியில் மேலும் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்களை நெல்லியடிப் பொலீஸார் கைது செய்துள்ளனர்.இன்று அதிகாலை நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர அவர்களின் அறிவுறுத்தல்களின்படி துன்னாலை கிழக்கு பகுதியில் தேடுதல் வேட்டை நடாத்திய போது,

துன்னாலை கிழக்கு பறையன்குளம் பகுதியில் ஒருலட்சத்து ஆயிரத்து 250 மில்லி லீீற்ரர் கோடாவும், இரண்டாயிரம் மில்லி லீீற்ரர்  கசிப்பும் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட 35 மற்றும் 21 வயதுடைய இரு பெண்களை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.