• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நயினாதீவில் வீசிய மினி சூறாவளி

Dez 30, 2021

யாழ்ப்பாணம் – நயினாதீவில் மினி சூறாவளி வீசியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா (T .N . Suriyaraja) தெரிவித்துள்ளார்.

இன்று மாலை சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு  குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்ற நிலையில் இன்று மாலை நயினாதீவு வடக்கு பகுதியில் வீசிய மினி சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed