• Mo.. Jan. 20th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மிளகாய் திருடிய இருவருக்கு நீதிமன்றம் தண்டனை!

Feb. 21, 2022

யாழில் பச்சை மிளகாய் திருடிய இருவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பச்சை மிளகாய் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மயிலங்காடு, புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிலேயே இவர்கள் பச்சை மிளகாய் திருடினர் என்று கூறப்படுகின்றது.

10 மற்றும் 15 கிலோ பச்சை மிளகாய்கள் திருடப்பட்டுள்ளன என்று தோட்ட உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed