எதிர்வரும் 2 வாரங்களில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வழமையாக வருடத்தின் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடத்தில் பல முறை பிற்போடப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் எதிர்வரும் சில நாட்களில் குறித்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Von Admin