தம்புள்ளை – அனுராதபுரம் வீதியின் புலகல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

நேற்றிரவு பயணிகளை ஏற்றிச் சென்ற போது குறித்த பேருந்து தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது பேருந்தில் பயணிகள் இருந்த போதிலும் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசேட விசாரணை ஆரம்பித்துள்ளனர். 

Von Admin