• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாகிஸ்தானில் இளம் பெண் நடுவீதியில் சுட்டுக்கொலை!

Mrz 23, 2022

பாகிஸ்தான் சிந்து மாகாணம் ரோகி நகரில் 18 வயதான இந்து பெண் ஒருவர் நடுவீதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

“சிந்து மாகாணம் ரோகி நகரில் வசித்து வந்தவர் 18 வயதான பூஜா குமாரி. இவர் நேற்று இரவு தனது வீடு அருகே உள்ள வீதியில் சென்று கொண்டிருந்த போது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் செல்ல முற்பட்டனர்.

பூஜா குமாரியை கட்டாய திருமணம், மதமாற்றம் செய்யும் நோக்கத்தோடு அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த வாஹித் லஷ்கரி என்ற இளைஞன் தனது நண்பர்களுடன் இணைந்த இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.

எனினும், இதன்போது குறித்த யுவதி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த இளைஞர் துப்பாக்கி பிரயோம் மேற்கொண்டுள்ளார். இதில் படுகாயமடைந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பூஜா குமாரியை ஏற்கனவே கடத்தி கட்டாய திருமணம் செய்ய வாஹித் முற்சித்ததாகவும், அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் நேற்று மீண்டும் இரண்டாவது முறை கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவது கடத்தல் முயற்சியின் போது பூஜா குமாரி எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை வாஹித் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுட்டுக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed