ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டங்களுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொட ஆகிய பிரதேசங்களுக்கு இந்த ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

களனி, கல்கிஸை காவற்துறைப் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரையில் காவற்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.