வாயுத் தொல்லை, வயிற்றுப் புண் உள்ளிட்ட பலவிதமான வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு ஓர் சிறந்த தீர்வாகவும் அதிமதுரம் விளங்குகிறது.

பல் சொத்தை, ஈறு பகுதியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், வாய்ப்புண் உள்ளிட்ட பலவிதமான வாய் சார்ந்த பிரச்சினைகளுக்கும் அதிமதுரம் சிறந்த ஒரு தீர்வாக உள்ளது.

பலவிதமான சுவாசப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அதிமதுரம் விளங்குகிறது. குறிப்பாக ஆஸ்துமா, தொண்டை பிரச்சனை, நெஞ்செரிச்சல், சளி மற்றும் இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு அதிமதுர வேர் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக திகழ்கிறது.

அதிமதுரம் சற்று திராவகத்தன்மை வாய்ந்த மருத்துவ மூலிகை என்பதால் அதில் கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தி அதிகம் உள்ளது. அதிமதுரத்தை அவ்வப்போது சிறிதளவு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம் பெரும். உடலில் சேர்ந்திருக்கும் நச்சுத்தன்மைகளை நீக்கும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அதிமதுரம் உதவக் கூடிய ஒன்றாக விளங்குகிறது.

அதிமதுரத்தை நன்றாக பொடித்து பசுப்பாலில் போட்டு கலக்கி, அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு நரம்புகள் வலிமைபெறும், தாது புஷ்டி உண்டாகும். பெண்களின் கருப்பையில் இருக்கும் குறைகளை போக்கி சீக்கிரத்தில் கருவுற செய்யும்.

சிறிதளவு அதிமதுரத்தை தூய்மையான பசுப்பாலில் ஊறவைத்து, பிறகு நன்கு அரைத்து அந்த விழுதை தலையில் நன்கு ஊரும் வகையில் அழுத்தி தேய்த்து, சுமார் இரண்டு மணிநேரம் கழித்து தலைக்கு குளித்தால் தலைமுடி உதிர்வது குறையும்.

Von Admin