• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோழிக உணவுகளின் விலைகள் அதிகரிக்கலாம்??

Apr 26, 2022

எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயை விட அதிகரிக்கலாமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளதோடு, இந்த விலை உயர்வை தடுக்க முடியாதெனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முட்டை உற்பத்தியின்போது கோழி உணவுக்கு தேவையான இரசாயனங்களில் வெறும் 3 இராசயனங்களே உள்ளநாட்டில் காணப்படுகிறது. ஏனைய 11 இராசாயனங்களும் வௌிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுகிறதாகவும் தெரிவித்தார்.

வீடுகளில் முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்காக 26 ரூபாய் செலவிடப்படுகிறது. கிராமிய விவசாயிகள் முட்டை ஒன்றுக்காக 31 ரூபாயை செலவிடுகிறார்கள். எனினும் 20 – 21 ரூபாயை செலுத்தியே விவசாயிகளிடமிருந்து முட்டையைப் பெற்றுக்கொள்கிறார்கள் எனவும் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக் காரணமாக கோழிக உணவுகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. இது தொடர்பில் உரிய தரப்பினர் விரைவாக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed