• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் 4 உயிர்களை காவுகொண்ட விமான விபத்து

Mai 1, 2022

கனடாவில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்கு உள்ளானதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒன்றாரியோவின் மாரத்தான் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விமான விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்ட பகுதிக்கு நான்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டுள்ளது.

விமானம் விபத்துக்கு உள்ளான நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தில் பயணம் செய்த நான்கு பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. கனேடிய இராணுவ கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் வாகன விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்திருந்த நிலையில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed