ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் சித்திரை 21 ஆம் திகதி முதல் வைகாசி மாதம் 14 ஆம் திகதி வரை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது அதிக உச்சம் பெறும் வேளையில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் இந்த காலம் ‘அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது.

வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 28 வரை நீடிக்கும். அதேசமயம் வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போது சூரியனின் வீரியம் அதிகரிக்கும்.

பூமி உஷணத்தைக் கிளப்பும் வேகமும் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும். மேலும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கும். அதுவும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலத்தில், வெப்பமும் சூடும் மிக அதிக அளவில் இருக்கும்.

இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். குறிப்பாக, முதல் 7 நாட்களில் மெதுவாக வெப்பத்தின் தாக்கம் ஏறுமுகமாக இருக்கும். அடுத்த 7 தினங்கள் அதிக அளவில் தெரியும். கடைசி 7 தினங்களில் படிப்படியாக குறையும்.

எனவே கோடை காலத்தில் சிறுநீர் கடுப்பு ஏற்படும். அதை தடுக்க நீர் நன்னாரி வேர் ஊற வைத்த குடிநீர் சீரகக் குடிநீர் சிறந்தது. அதோடு பானகரம் குடிப்பது வெயிலுக்கு சிறந்தது.

ஒருகைப்பிடி புளி, எலுமிச்சை சாறு, வெல்லம் ,சுக்கு ஏலம், இவற்றை தேவையான தண்ணீரில் நன்றாகக் கலந்து அவ்வப்போது குடித்து வர வேண்டும் இது சிறுநீர் கடுப்பு வராமல் பாதுகாக்கும் அதி வியர்வையினால் ஏற்பட்ட களைப்பையும் நீக்கும்.

மேலும் சுரைக்காய், தர்பூசணி, இளநீர் ,கிர்ணி பழம், வெள்ளரிக்காய், சிட்ரஸ் வகை பழங்கள், வாழைத்தண்டு, முள்ளங்கி காய், இவைகளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வதன்மூலம் வாட்டும் வெய்யிலில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.