• Sa. Apr 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் பண மோசடியில் ஈடுபட்ட தமிழ் குடும்பம்

Mai 19, 2022

கனடாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட தமிழ் குடும்பம் ஒன்றின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

கனடா சிறு வணிக நிதித் திட்டம் (CSBF) மூலம் பெறப்பட்ட ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை மோசடி செய்துள்ளதாக குறித்த குடும்பத்திற்கு எதிரான குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறு வணிக நிதித் கடன் திட்டத்தின் நோக்கம் சிறிய மற்றும் நடுத்தர கனேடிய வணிகங்களுக்கு நிதி ஆதாரங்களுடன் உதவுவதாகும்.

எனினும், டொராண்டோவை சேர்ந்த தமிழ் குடும்பம் இந்த நிதியை மோசடியான முறையில் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி மோசடி செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் டொராண்டோவை சேர்ந்த தமிழ் குடும்பத்தின் மீது ரோயல் கனடியன் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர கனேடிய வணிகங்களுக்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நிதி உதவி திட்டத்தின் ஊடாக தமிழர்கள் குழுவினால் நிதி மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனேடியர்களுக்கு வழங்கப்பட்ட இந்த உதவி தொகையை பலரின் பெயர்களில் மோசடியான முறையில் பெறுவதற்காக இந்த தமிழர்கள் முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்காக பாரிய அளவிலான மோசடி ஆவணங்களை கொண்டு உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ளதாக விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், கஜீபன் நடராஜா, சின்னத்தம்பி நடராஜா, கருணாதேவி நடராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed