டர்ஹாம் பிராந்தியத்தில் இந்த ஆண்டு இடம்பெற்ற ஆறாவது படுகொலையை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ப்ரோக் சாலைக்கு மேற்கே உள்ள டவுன்டன் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹோண்டா கார் ஒன்று மோதியதற்காக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வாகனத்தின் உள்ளே இருந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகவும் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை நடத்தப்படும் வரை பாதிக்கப்பட்டவரின் அடையாளம் வெளியிடப்படாது என்று பொலிஸார் முன்னர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், பிக்கரிங்கைச் சேர்ந்த 20 வயதான அரவின் சபேசன் என்பவரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன், அவரது மரணத்தை கொலை என்றும் பொலிஸார் அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்தியத்தின் பொலிஸார் கூறியுள்ளனர்.

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை

Von Admin