ஆப்பிரிக்காவில் பெண்ணை மோசமாக தாக்கி கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு விதமான வித்தியாசமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் சில உலகளவில் வியப்பை ஏற்படுத்துவதாகவும், விவாத பொருளாகவும் மாறிவிடுகின்றன.

அப்படியான ஒரு சம்பவம்தான் ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கு சூடானில் நடந்துள்ளது. அங்கு 45 வயதான பெண்மணி ஒருவரை செம்மறி ஆடு ஒன்று கொடூரமாக தாக்கி கொன்றுள்ளது. இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் எப்படியோ ஆட்டைப்பிடித்து ஒரு கூண்டில் அடைத்து சூடான் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

போலிஸார் அந்த ஆட்டை குற்றவாளியாக வழக்குப்பதிவு செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்துள்ளனர். பின்னர் பெண்ணை கொன்றதற்காக செம்மறி ஆட்டிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஆட்டை ராணுவ சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Von Admin