• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிட்சர்லாந்தில் 2022 ஜூன் மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள்

Mai 31, 2022

ஜூன் மாதம், சிலருக்கு நல்ல செய்திகளையும் சிலருக்கு ஏமாற்றங்களையும் அளிக்க இருக்கிறது.

அவ்வகையில், 2022ஆம் ஆண்டு, மே மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.

ஜூன் 1

புதிய தீவிரவாத எதிர்ப்பு கட்டுப்பாடுகள் அமுல்

தீவிரவாதத்துக்கு எதிராக பொலிசாருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி அவர்கள், தீவிரவாத தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்னணு கண்காணிப்பு மற்றும் வீட்டுச்சிறை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

ஜூன் 1

உக்ரைன் அகதிகளுக்கு இனி இலவச பயணம் கிடையாது

மார்ச் 21 முதல் உக்ரைன் அகதிகள் சுவிட்சர்லாந்தில் பொதுப்போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி வருகிறார்கள். அந்த சலுகை, ஜூன் மாதம் 1ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.

ஜூன் 10

கோவிட் பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் புதிய விதிகள்

இனி வெளிநாடு செல்பவர்கள், தங்களுக்கு இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டுமானால், அதற்கான செலவை தாங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் என பெடரல் பொது சுகாதாரத்துறை அற்வித்துள்ளது.

ஜூன் 21

கோடை துவங்குகிறது

ஜூன் 21 வட பகுதிகளில் கோடையின் துவக்க நாளாக குறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோடை, வழக்கத்தை விட அதிக வெப்பம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 30

சுவிட்சர்லாந்துக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான வீட்டிலிருந்து பணி முதலான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வருகின்றன.

ஜேர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் Liechtenstein ஆகிய நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பணிக்கு வருவோர், வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்தல் முதலான விதிகள் ஜூன் 30உடன் முடிவுக்கு வருகின்றன.  

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed