குறைந்த அளவிலான அரச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பிலான சுற்று நிரூபமொன்று பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அத்தியாவசியமான குறைந்த அளவிலான அரச ஊழியர்களை மாத்திரம் நாளாந்த தேவைகளுக்கு அமைய சேவைக்கு அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரம் அனைத்து அரச நிறுவனங்களினதும் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.