• Di. Dez 10th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 7,500 ரூபா!

Jul 1, 2022

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 7,500 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த கொடுப்பனவு இந்த மாதம் முதல் 06 மாத காலத்திற்கு குடும்பங்களுக்கு வழங்கப்படும்.இந்த கொடுப்பனவு மூலம் 3.2 மில்லியன் மக்கள் பயனடைவார்கள் என அவர் கூறியுள்ளார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை உணவு பெற்றுக்கொள்ள போராடும் மக்கள் உள்ளனர். 

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும். எனினும் தற்போதைய பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த உதவித் தொகை மிகவும் குறைவானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed