• Mi. Apr 24th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்.

Jul 13, 2022

அரச ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதாகவும், அதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையினால் அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது சந்தேகமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்கப்பட வேண்டுமாயின் பதில் ஜனாதிபதி ஒருவரை நியமிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்து, அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தவிட்டால் இந்த மாதம் 25ம் திகதி அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளங்களை வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் தீர்மானத்தை நிதிச் சபைக்கு அறிவித்தால் மட்டுமே பணம் அச்சிடப்பட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

வாழ்க்கைச் செலவு படி, மேலதிக நேரக் கொடுப்பனவு தவிர்ந்த சம்பளத்தை மட்டும் வழங்குவதற்கு 29 பில்லியன் ரூபா பணம் தேவைப்படுவதாக சிரேஸ்ட அமைச்சர் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed