கொழும்பிலிருந்து யாழ்.சென்ற வாகனமொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

நீர்வேலி, பூதர்மடம் பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நெல்லியடிக்கு சென்று கொண்டிருந்த காரின் சாரதிக்கு நித்திரை கலக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி அங்கிருந்த மின்கம்பத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வாகனம் அதிஉயர் மின்னழுத்த கம்பம் மீது மோதிய போது காரின் எயார்பாக் (Airbag) உடனடியாக வெளிவந்தால் சாரதியும் அவருக்கு அருகில் இருந்து பயணித்தவரும் எந்தவித உயிர் சேதங்களுமின்றி தப்பியுள்ளனர்..

இதனை தொடர்ந்து மின்சார சபைக்கு அறிவித்ததையடுத்து மின்சார ஊழியர்கள் வருகைதந்து மின்கம்பத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Von Admin