யாழ்ப்பாணம் மாவட்டம், கோண்டாவில் மேற்கு சைவப் பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் பட்டப்பகலில் வாழைக்குலை திருடப்பட்டுள்ளது.

துவிச்சக்கரவண்டியில் வந்த இரு இளைஞர்கள் மதிலோரம் தொங்கிக் கொண்டிருந்த கப்பல் வாழைக்குலையை பட்டப்பகலில் மதிலில் ஏறி வெட்டி கட்டிக்கொண்டுபோகும் காட்சி கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த பிரதேசத்தில் வாழைக்குலை மற்றும் தேங்காய் திருட்டு அடிக்கடி இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

Von Admin