கனடாவின் எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தின் விதிகளில் 2023இல் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அந்த மாற்றங்கள் 2023ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில், எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்தின் கீழ், கனடா 3,750 புலம்பெயர்ந்தோருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு அழைப்பு அனுப்பியது. இது முன்பு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 500 அதிகம்.

கனேடிய அனுபவ வகுப்பு, பெடரல் திறன்மிகு பணியாளர் திட்டம் மற்றும் பெடரல் திறன்மிகு வர்த்தக திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ், தகுதியுடையவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

செப்டம்பர் 14ஆம் திகதி 3,250 பேருக்கும், 31ஆம் திகதி 2,750 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

முதல் ஐந்து அழைப்புகளின்போது, ஒவ்வொரு அழைப்பின் போதும், எட்டு அல்லது ஒன்பது புள்ளிகள் குறைக்கப்பட்டன.

கொவிட் காரணமாக, 2020 டிசம்பர் முதல், சுமார் 18 மாதங்களுக்கு, அனைத்து எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டங்களும் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Von Admin