• Sa. Dez 14th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிரீஸ் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து- 15 அகதிகள் மரணம்

Okt 6, 2022

துருக்கியில் இருந்து கீரிசுக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் 2 படகுகளில் அகதிகளாக தப்பி சென்றனர். அப்போது கடுமையான சூறாவளி காற்று வீசியது. 

இதனால் 2 படகுகளும் நிலை தடுமாறி பாறைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதையடுத்து, படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி இருந்தனர். 

இதுபற்றி அறிந்ததும் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று 30 பேரை பத்திரமாக மீட்டனர். 15 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். 

மேலும், காணாமல் போன பலரை தேடும் பணி நடந்து வருகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed