யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவமானது இன்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்தானது இடம்பெற்றது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.