நாளைய தினத்திற்கான (13) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி,1 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில் மாலை 5.30 முதல் இரவு 8.30 வரையான காலப் பகுதியில் 1 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை,  14 ஆம் திகதி திங்கட்கிழமை 2 மணித்தியாலங்கள் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில் பகல் வேளையில் 1 மணித்தியாலமும் இரவு வேளையில் 1 மணித்தியாலமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.