நண்பனுடன் பைக்கில் பயணித்த வேளை இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நண்பன் உயிரிழந்தமை தெரியவந்ததையடுத்து தற்கொலைக்கு முயன்று இரண்டாவது முறை இளைஞன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் சீனிவாசன் (20) மற்றும் பிரபு(20). இருவருமே நெரு்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

இதயைனயடுத்து அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை இடம்பெற்ற விபத்தில் ஓட்டிச்சென்ற பிரபு தெய்வாதீனமாக தப்பித்ததையடுத்து மற்றவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபு உடல்நலம் தேரியதையடுத்து நண்பர் இறந்த செய்தி தெரியந்ததையடுத்து வைத்தியசாலையியே தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மீண்டும் விரக்தியில் இருந்த பிரபு வீட்டில் அனைவரும் உரங்கிய நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விபத்தில் நண்பர் பலியானதால் உயிர் தப்பிய வாலிபர் 2வது முறை முயற்சியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அடுத்தடுத்து தங்களது நண்பர்களை இழந்த எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் உள்ளவர் அதிர்ச்சியடைந்தனர்.

Von Admin