கடந்த மாதம் யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் 61 வர்த்தகர்களுக்கு எதிராக 14 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் பொறுப்பதிகாரி விஜிதரன் தெரிவித்தார்.

அதன்படி, பொருட்களின் சந்தை விலையை காட்டாதது, கட்டுப்பாட்டு விலையை தாண்டி பொருட்களை விற்பனை செய்தல், ஏமாற்றும் நோக்கத்தில் பொருளின் மீது அச்சிடப்பட்ட விலையில் மாற்றம் செய்தல், எடையில் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் தயாரித்தல் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Von Admin