சவுதி செல்லும் இந்தியர்கள் விசா பெறுவதற்காக போலீஸ் அனுமதி சான்றிதழ் பெறுவது இனி அவசியமில்லை என சவுதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து பலர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகள் செல்லும் நிலையில் அதிகமானோரின் தேர்வாக இருப்பது சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள். பல்வேறு வகையான வேலைகளுக்கும் இந்தியர்கள் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் நிலையில் இதற்காக விசா பெறுவதில் கடும் கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது.

முக்கியமாக சவுதி அரேபியாவிற்கு விசா பெறுவதற்கு முன் இந்திய குடிமக்கள் அவர்கள் மீது வழக்கு ஏதும் இல்லை என்ற போலீஸ் அனுமதி சான்றிதழை பெற வேண்டும் என்ற முறை அமலில் இருந்து வந்தது.

இந்த அனுமதி சான்றை பெற நாட்களாவதால் பலரது அரபு பயணம் தாமதமடைந்து வந்தது. இந்நிலையில் சவுதி அரேபியா – இந்தியா இடையே உள்ள உறவை வலுப்படுத்தும் விதமாக இனி இந்தியாவினர் அரபு விசா பெற போலீஸ் அனுமதி சான்றிதழ் தேவையில்லை என அறிவித்துள்ளது.

Von Admin