பண்டாரகம – மொரன்துடுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் உந்துருளி பந்தயம் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விபத்தில் 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

Von Admin