• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாடசாலை மாணவிகள் திடீர் சுகவீனம்! வைத்தியசாலையில் அனுமதி

Nov. 20, 2022

பாடசாலை மாணவிகள் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் மதவாச்சி யக்கவேவ கல்லூரியில் இடம் பெற்றுள்ளது.

தரம் 07 இல் கல்வி கற்கும் 5 மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த 5 மாணவிகளும் காய்ச்சல், வாந்தி, தலைவலி, மற்றும் கடும் சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகுப்பில் கற்கும் மாணவி ஒருவர் கொண்டு வந்த நறுமண போத்தலை பூசியதால் மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.