யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த எரிவாயு சிலிண்டர் ஒன்று நேற்று முன்தினம் திருடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றையதினம் சுதுமலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து எரிவாயு சிலிண்டர் ஒன்று திருட்டு போயுள்ளது.

துவிச்சக்கர வண்டியில் வந்து ஒருவர் குறித்த வீட்டிற்குள் நுழைந்து சிலிண்டரை திருடிச் சென்றமை அருகில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.