யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்கன்குளம் பகுதியில் தொடருந்து மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (21.11.2022) பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் செ.விமலதாஸ் (வயது 43) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.