கொரோனா காலகட்டத்துக்குப் பின்னர் பயணங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சுவிஸ் விமான நிறுவனமான சுவிஸ் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது.

சுவிஸ் விமான நிறுவனமான சுவிஸ் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் Lufthansa நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம், 2023 இறுதிக்குள் 20,000 பேருக்கு பணி வழங்க இருப்பதாக நேற்று அறிவித்தது.கொரோனா காலகட்டத்தில் பயணங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்ததால் அந்நிறுவனம் ஏராளமானோரை வீட்டுக்கு அனுப்பியது.தற்போது பணியாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பெரும்பாலும், விமானப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதுபோக, தொழில்நுட்பக் கலைஞர்கள், தகவல் தொழில்நுட்பத்துறைப் பணியாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விமானிகள் தேவைப்படுகிறார்கள்.  

Von Admin