• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வியட்னாம் கடலில் பிடிபட்ட யாழ் சாவகச்சேரி குடும்பஸ்தர் மரணம்!!

Nov 24, 2022

அண்மையில் கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருப்பதாக வியட்னாம் தூதுவராலயம் சார்பாக குடும்பத்தினருக்கு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான
இவர் பொருளாதார சூழல் காரணமாக புலம் பெயர முயற்சித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இவருக்கு பிறந்து ஆறு மாதங்களே ஆன பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர வழியறியாது குடும்பத்தினர் தவித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed