க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 7மாணவர்கள் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் முடிவுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்தன. அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளனர்.

இதன்படி ரமேஷ் தனு , நந்தகுமார் லிதுசன் , வருண்யா கணேசநாதன் , டனுக்க்ஷி விஸ்வநாதன் , ரஸ்மினா ஜேசுராசா , கிருஷாலினி கிருஷ்ணகுமார் , கிநோஜி சேகர் ஆகிய 7 மாணவர்களே இவ்வாறு 9A சித்திகளைப் பெற்றுள்ளனர்.

பாடசாலையின் 7 மாணவர்கள் 9A சித்திகளையும் 3 மாணவர்கள் 8A B சித்தியினையும் பெற்றதோடு 1 மாணவர் 7A2B சித்தியினையும் 2 மாணவர்கள் 6AB2C சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.இந்நிலையில் சித்திபெற்ற  மாணவர்களையும், பாடசாலை அதிபர்,  ஆசிரியர்கள்  சமூகத்தையும்  பலரும் பாராட்டி வருகின்றனர்.

முல்லைத்தீவு மாணவிகள் 9A பெற்று சாதனை!