சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் குறித்த சிறுமியும் அவருடன் தங்கியிருந்தார் எனக் கூறப்படும் நபர் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

13 வயதுடைய அச் சிறுமியும் அச் சந்தேக நபரும் இரத்தினபுரி லெல்லோபிட்டிய பகுதியில் வீடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த சிறுமியை தமது பொறுப்பில் எடுத்துக் கொண்ட இரத்தினபுரி பொலிஸார் அவருடன் தங்கியிருந்த சந்தேக நபரான இளைஞரைக் கைது செய்துள்ளனர்.

பின்னர் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக இங்கினியாகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

13 வயது சிறுமி ஒருவர் தனது பாதுகாப்பில் இருந்தபோது கடத்தப்பட்டதாக தாயொருவர் இங்கினியாகல பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.