2022 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். டிசம்பர் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது.

அந்த வகையில் உங்கள் ராசிக்கு 2022 டிசம்பர் மாதம் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

மேஷம் ;

டிசம்பர் மாதம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். கடின உழைப்பு நற்பலனைத் தரும். குடும்பத்தில் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பேசும் போது உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். இம்மாதத்தில் உறவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம் ;

டிசம்பர் மாதத்தின் தொடக்கம் சாதகமான பலன்களைத் தரும். வியாபாரிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இம்மாதத்தில் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக இது குடும்பத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். நிதி பிரச்சனைகள் அதிகம் இருக்கும். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் அமையும். செலவுகள் அதிகரிக்கும்.

மிதுனம் ;

டிசம்பர் மாதம் வேலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுக்கு நன்கு பழகினால், உங்கள் வேலையில் சிறப்பாக செயல்பட முடியும். உயர்கல்விக்கு ஏற்ற காலம். வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். பெரும்பாலும் இந்த பிரச்சனைகள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடகம் ;

டிசம்பர் மாதத்தில் பெரும்பாலும் வேலையில் குறுக்கு வழிகளை கண்டுபிடிப்பீர்கள். மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இம்மாதத்தில் ஆர்வத்துடன் காரியங்களை செய்ய முயற்சிப்பீர்கள். நிதி விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். பணம் அதிகம் செலவாகும். இருப்பினும் நிதி நிலை ஓரளவு சீராக இருக்கும். காதல் விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள்.

சிம்மம் ;

டிசம்பர் மாதம் வியாபாரிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பல பிரச்சனைகள் வரும். இதனால் மன அமைதி சீர்குலையும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகள் வரலாம். தாம்பய வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் செலவுகளின் மீது கண் வைத்திருக்க வேண்டும். வேலை தொடர்பாக வாழ்க்கைத் துணையுடன் அடிக்கடி சண்டை வரக்கூடும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

கன்னி ;

டிசம்பர் மாதம் வேலையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் வேலையை நீங்கள் அதிகம் நேசிப்பீர்கள். மாணவர்களுக்கு இது சாதகமான மாதமாக இருக்கும். பல வழிகளில இருந்து பணம் வர வாய்ப்புள்ளது. உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். வேலையில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியாக சில சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

துலாம் ;

டிசம்பர் மாதத்தில் வேலையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வெற்றியும், லாபமும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். மொத்தத்தில் டிசம்பர் மாதம் வெற்றிகரமான மாதமாக இருக்கும். குடும்பத்தில் பல சுப காரியங்கள் நடக்கும். ஆனால் துணையுடன் சிறுசிறு சச்சரவுகளும் பிரச்சனைகளும் வர வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும்.

விருச்சிகம் ;

டிசம்பர் மாதத்தில் உங்களின் செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். திருமண விஷயத்தில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். திருமண வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் உங்களுக்கு அதிக சவால்களை கொடுக்கும். மாணவர்களுக்கு நல்ல மாதமாக இருக்கும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தனுசு;

டிசம்பர் மாதத்தில் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ, உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். அதிகம் கோபம் கொள்ளாதீர்கள். செலவுகள் இருந்தாலும், வருமானம் அதிகரிப்பதில் எவ்விர பிரச்சனையும் இருக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனமாக இருக்க வேண்டும்.

மகரம் ;

டிசம்பர் மாதமானது தொழில் ரீதியாக சாதகமாக இருக்காது. வேலையில் தவறுகளை செய்ய வாய்ப்புள்ளது. பெரும்பாலும் வேலையைத் தொடர்வதில் சில சிரமங்கள் இருக்கும். வாழ்க்கைத் துணையின் மீது அன்பு அதிகரிக்கும். இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடுவீர்கள். நிதி ரீதியாக இம்மாதம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம் ;

டிசம்பர் மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் வேலையில் சிறுசிறு பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். புதிய பணிகளால் பணிச்சுமை கூடும். துணையுடன் உறவில் சிறுசிறு பிரச்சனைகள் அதிகரிக்கும். செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிதி நெருக்கடிகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

மீனம் ;

டிசம்பர் மாதத்தில் வேலை மாற்றம் அல்லது இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு வெற்றிகரமான மாதமாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். அனைத்து பணிகளையும் குறித்த நேரத்தில் முடிக்க முடியும். பெரிய நிதி சிக்கல்களை அனுபவிக்க வேண்டிய அவசியமிருக்காது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாகத் தொல்லை கொடுத்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் இம்மாதத்தில் நீங்கும்