• Sa. Okt 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மொராக்கோவிடம் மண்ணை கவ்விய பெல்ஜியம்! – வெடித்தது வன்முறை!

Nov 28, 2022

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி தோற்றதால் பெல்ஜிய கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இந்த முறை கத்தாரில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் பெரிய பெரிய சாம்பியன் அணிகள் கூட சிறிய அணிகளிடம் தோற்கும் ஆச்சர்யமான சம்பவங்களும் நடந்து வருகிறது.

நேற்று நடந்த போட்டியில் குருப் எஃப் பிரிவில் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியும், மொராக்கோ அணியும் மோதிக் கொண்டன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவிடம் மண்ணை கவ்வியது. இது பெல்ஜிய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தோல்வியின் காரணமாக ஆத்திரமடைந்த ரசிகர்கள் பெல்ஜியம் தலைநகர் ப்ரெஸ்ஸல்ஸில் பெல்ஜிய கொடியை எரித்து எதிர்ப்பை காட்டியுள்ளனர். மேலும் கார், பைக்குகளுக்கும் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. அதை தொடர்ந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed