சமீபத்தில் வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், கனடாவில் செல்வ செழிப்பு மிக்க பகுதிகளை பட்டியலிடப்பட்டுள்ளது. கனடிய வணிக இதழ் ஒன்று குறித்த தரவுகளை திரட்டி, தற்போது தொகுத்து வெளியிட்டுள்ளது.

அதில், முதல் ஐந்து இடங்களில் இருக்கும் பகுதிகளின் தொகுப்பு இது. அந்தவகையில் 5வது இடத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள Kerrisdale பகுதி உள்ளது. இப்பகுதியில் குடியிருக்கும் மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு என்பது 12,850,938 கனேடிய டொலர்.

4வது இடத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் Shaughnessy Heights உள்ளது. வான்கூவர் நகரில் மிகவும் செல்வ செழிப்பு மிக்க பகுதி இதுவாகும். இங்குள்ள மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு 13,811,849 கனேடிய டொலர்.

வது இடத்தில் ஒன்ராறியோவின் Bridle Path பகுதி இடம்பெற்றுள்ளது. கனடாவில் செல்வ செழிப்பு மிக்க பகுதிகளின் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும் பகுதி Bridle Path. இங்குள்ள மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு 19,729,098 கனேடிய டொலர்.

2வது இடத்தில் ஒன்ராறியோவின் York Mills-Windfields பகுதி உள்ளது. கனடாவின் செல்வந்தர்கள் பலர் குடியிருக்கும் பகுதி இது. இங்குள்ள மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு 20,944,385 கனேடிய டொலர்.முதலிடத்தில், ரொறன்ரோ நகரத்தில் அமைந்துள்ள Sunnybrook பகுதியாகும். இங்கு அமைந்துள்ள சன்னிபுரூக் சுகாதார அறிவியல் மையம் இப்பகுதியின் முதன்மை அடையாளமாகும். இங்குள்ள மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு என்பது 22,709,428 கனேடிய டொலராகும். மட்டுமின்றி, இங்குள்ள மக்களின் சராசரி ஆண்டு வருமானம் என்பது 289,434 கனேடிய டொலர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.