யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இன்று (27) மாலை பட்டாரக வாகனம் காரில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் பட்டாரக வாகன சாரதி மற்றும் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை கோப்பாய் போக்குவரத்து பிரிவு பொலிஸார் முன்னேடுத்துவருகின்றனர்.