உலக சுகாதார நிபுணர்களால் குரங்கம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

monkeypox என்பது தற்போது mpox என அழைக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. 

குரங்கம்மை என்ற பெயர் இனவெறியை தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் புதிய பெயரை சூட்ட முடிவு செய்தது.

நிபுணர்கள், நாடுகள் மற்றும் பொதுமக்கள் இடையே நீண்ட விவாதங்களுக்குப் பிறகு Mpox முடிவு செய்யப்பட்டது எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் எளிதாகப் பயன்படுத்தப்படலாம் என்று WHO தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு, mpox வைரஸ் அசாதாரணமாக பரவியுள்ளது – பெரியம்மை போன்ற வைரஸ்களின் குடும்பத்தைச் சேர்ந்தது.

மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிற்கு வெளியே உள்ள பல நாடுகளில், இது அடிக்கடி பரவும் நோயாக காணப்படுகின்றது. 

இந்நிலையில், நோய் தீவிரமாக பரவ தொடங்கிய நிலையில், ஜூலை மாதம் WHO உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்தது,

2022 இல் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளில் இந்நோய் பரவியது.

அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான mpox வழக்குகள் பதிவாகியுள்ளன.

உலகளவில் இந்த வைரஸால் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.