காலி – மாபலகம பிரதேசத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சகல பாடங்களிலும் ‚ஏ‘ சித்தியைப் பெற்ற இரட்டை சகோதரிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன.

காலி , மாபலகம பிரதேசத்தில் வசிக்கும் தினுமி நிம்சரா மற்றும் ரசாரி ரன்சராய் என்ற இரட்டை சகோதரிகள் காலி, சிறி சுனந்தா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றுள்ளனர்.

இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய இருவரும் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதற்கமைய, பரீட்சைக்குத் தோற்றிய 231,982 மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 10,863 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‚ஏ‘ தேர்ச்சி பெற்றுள்ளதுடன், 6566 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைய முடியாமல் போயுள்ளனர்.

எவ்வாறாயினும், பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களை தொழில்நுட்பத் துறையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.