• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியா எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

Nov 29, 2022

பாதுகாப்பான நாடுகள் என கருதப்படும் நாடுகளிலிருந்து வந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றுவதை விரைவுபடுத்த ரிஷி சுனக் அரசு திட்டமிட்டுவருகிறது.

பாதுகாப்பான நாடுகள் என கருதப்படும் நாடுகள் கொண்ட வெள்ளைப் பட்டியல் ஒன்றை உருவாக்க பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன் விரும்புவதாக கூறப்படுகிறது.

அதாவது, ஒரு நாட்டில் போர், பஞ்சம், அரசியல் பிரச்சினைகள் போன்ற காரணங்கள் எதுவும் இல்லாத நிலையிலும், அந்த நாட்டிலிருந்து படகு மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோர் இருக்கிறார்கள். தன் நாட்டில் வாழ்வதைவிட நன்றாக வாழ்வதற்காக அவர்கள் பிரித்தானியாவுக்கு வருகிறார்கள். அவர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பவேண்டும் என்பதுதான் பிரித்தானியாவின் திட்டம்.

ஆக, அப்படிப்பட்ட பாதுகாப்பான நாடுகள் கொண்ட பட்டியல்தான் ‘வெள்ளைப் பட்டியல் என இங்கு குறிப்பிடப்படுகிறது.

புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பத் திட்டம்அப்படிப்பட்ட நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்புவதுதான் திட்டம்.

இன்னொரு விடயம், இப்படி திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை நிரூபிக்க முடியாத பட்சத்தில், அதை எதிர்த்து மேல் முறையீடும் செய்யமுடியாத வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed