• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

டெல்லி விமான நிலையத்தில் ரூ. 1.40 கோடி பெறுமதியிலான தங்கம் பறிமுதல்

Nov 30, 2022

டெல்லி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதித்தனர். 

அப்போது குறிப்பிட்ட 2 பயணிகளின் உடமைகளில் ஆயிரத்து 849 கிராம் தங்க நகைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட அந்த நகைகளை அதிகாரிகள் கைப்பற்றி 2 பேரையும் கைது செய்தனர். அதைப்போல மேலும் 2 பயணிகளின் உடமைகளில் 914.5 கிராம் எடையுள்ள 2 தங்கக்கட்டிகள் இருந்தன. 

அதிகாரிகள் அவற்றைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகிறார்கள். கைப்பற்றப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.1.40 கோடி ஆகும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed