திருகோணமலையில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில் தமிழ் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 
புல்மோட்டை பிரதான வீதியின், கும்புறுப்பிட்டிப் பகுதியில்  இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
 
நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் 44 வயதான கீதாஞ்சனா தேவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
 
மோட்டார் சைக்கிளும், பவுசரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
மோட்டார் சைக்கிளில் தாதி உத்தியோகத்தரும், ஆசிரியையும் கடமைக்காகச் சென்று கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது.
 
தாதியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது அக்காவான ஆசிரியையே படுகாயமடைந்துள்ளார்.
 
கடந்த வாரம் வெளியான க.பொ.த சாதாரண பரீட்சையில் அவரது மகள் 9 A பெற்ற நிலையில் தாயான கீதாஞ்சனா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.