குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் என பெயர் சூட்டுங்கள் என வடகொரியா அரசு பெற்றோருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இந்த உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரியாவில் இதுவரை அன்புக்குரிய, பேரழகு போன்ற பொருள்களை கொண்ட பெயர்கள் மட்டுமே அதிகமாக சூட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த அன்புக்குரிய பெயர்களை எடுத்துவிட்டு உடனடியாக அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் என பெயர் சூட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இந்த உத்தரவை கடைபிடிக்காவிட்டால் பெற்றோருக்கு கடுமையான அபதாரம் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.