பிரித்தானியாவின் கிளாஸ்கோ விமான நிலையத்தில் இன்று குழப்பநிலையொன்று ஏற்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் பயணிகளின் பையில் சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விமான நிலையம் முழுவதும் மூடப்பட்டுள்ளது.

ஊழியர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் காலை 6 மணியளவில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் டெர்மினல் கட்டிடம் முழுவதும் தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் விமான பயணிகளுக்கு போதுமான தகவல் வழங்கப்படாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்காட்லாந்து பொலிஸார் மத்திய தேடுதல் பகுதியில் பயணிகளின் பையில் இருந்து சந்தேகத்திற்கிடமான ஒரு பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பின்னர் பாதுகாப்பு காரணங்களால் கிளாஸ்கோ விமான நிலையத்தில் உள்ள டெர்மினல் கட்டிடம் மூடப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.