யாழ்ப்பாணத்தில் அண்மையில் வடையும் ரீயும் சாப்பிட்டமைக்காக, உணவகம் ஒன்றில் நபரொருவர் ஐ.போன் அடகு வைத்த சுவாரசியமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நகர் புறத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, வெளிநாட்டு பயணி ஒருவர் உணவருந்த சென்றுள்ளார்.

குறித்த உணவகத்தில் வடையும் ரீயும் சாப்பிட்டுள்ளார். அதன் பின்னர் 170 ரூபா பில்லுக்கான பணத்தை செலுத்துவதற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் 5000 ரூபா தாளை நீட்டியுள்ளார். இதன் போது 170 ரூபாவுக்கு 5000 ரூபாவை மாற்றி கொடுப்பதற்கும் பணம் இல்லை என்று உணவக கசியர் தெரிவித்துள்ளார்.

இதனால் சங்கடத்துக்கு உள்ளான வெளிநாட்டவர், தன்னிடமிருந்த ஐபோனை உணவகத்தில் கொடுத்து விட்டு பணத்துடன் வருகின்றேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் 30 நிமிடங்கள் கழித்து 170 ரூபா பணத்தை உணவகத்தில் கொடுத்து தனது ஐபோனை மீட்டுச் சென்றுள்ளார்.