ஒன்றாரியோ மாகாணத்தின் கோர்ன்வெல் பகுதியில் சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. கோர்ன் வெல்லுக்கு அருகாமையில் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

The Cessna 150 என்ற சிறிய விமானம் இவ்வாறு விபத்துக்குளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விமானத்தில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தில் பயணம் செய்த 26 வயதான நபர் ஆபத்தான நிலையில் விமானம் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் 39 வயதான மற்றுமொரு நபரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கியூபெக்கின் சாலாபெரி டி வெலிபீல்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 17 கிலோ மீற்றர் தொலைவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.