பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாடசாலைகளுக்கு அருகாமையில் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பாடசாலைகளுக்கு அருகில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சிறைச்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பனவற்றில் கடமையாற்றி வரும் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்பட உள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆலோசனைக்கு அமைய போதைப் பொருள் குறித்த முறைப்பாடுகளை செய்ய 0112580518 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து 24 மணித்தியாலங்ளும் முறைப்பாடு செய்ய முடியும் என விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர்.